Breaking News

Actress Kajal Agarwal Latest Photos

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் 30ம் தேதி மும்பையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காஜல் அணிந்திருந்த உடையை பார்த்து பலரும் புகழந்தார்கள். திருமண வரவேற்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காஜல் கழுத்தில் இருந்த தாலி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 

வைரக்கல் கொண்ட தாலியை அணிந்திருந்தார் காஜல் அகர்வால். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தாலியும் இதே மாடல் தான். ஆனால் தீபிகாவின் தாலியில் வைரத்திற்கு பதில் சாலிடெய்ர் இருக்கும். காஜலின் தாலி அப்படியே தீபிகாவின் தாலி போன்றே இருக்கிறதே என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

காஜல் தன் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காஜலை மனதார வாழ்த்தியுள்ளனர். கவுதம் கிட்ச்லுவை காதலித்து தான் காஜல் திருமணம் செய்து கொண்டார்.














No comments