OMG! Very Hot PhotoShoots
கவர்ச்சியின் உச்சியில்?... வைரலாகும் படுமோசமான திருமண போட்டோஷூட்!
கேரளாவில் நடத்தப்பட்ட திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் ரிஷி கார்த்திகேயன் - லட்சுமி ஜோடி திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் நடத்த அவர்கள் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கு இருவரும் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் ஆபாசமாக உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டோஷூட்டிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் தம்பதியனர் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து இதுவரை நீக்காமல் உள்ளனர். இதுபோன்று போட்டோஷூட் நடத்த புகைப்பட கலைஞர் தான் ஐடியா கொடுத்தார் என்கிறார் ரிஷி கார்த்திகேயன்.
லக்ஷ்மி தன்னிடம் வழக்கமாக எடுக்கும் போட்டோஷூட் போன்று இல்லாமால் விநோதமாக நடத்தலாம் என்று கூறியதால் இதுப்போன்று எடுத்தோம் என்று ரிஷி கூறியுள்ளார்.
Post Comment
No comments
Post a Comment