சிம்புவுடன் விரைவில் திருமணமா! நடிகை ஓவியா விளக்கம்!
சிம்புவுடன் விரைவில் திருமணமா! நடிகை ஓவியா விளக்கம்!
களவாணி படம் மூலம் தமிழ் திரையுலகிறக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா.நடிகர் சிம்புவுடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக வெளியாக தகவல் குறித்து நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் சிம்புவுடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக வெளியாக தகவல் குறித்து நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடித்துள்ள 90 எம்.எல்., படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சில தொழில்நுட்ப காரணத்தால், இந்த படம் வெளியாகும் தேதி மார்ச்1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு, நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் டிரைலர் மிகவும் படு ஆபாசமாக இருந்ததால், பெரும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் படம் வெளியாகும் நாள் அன்று, அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓவியா கூறுகையில், ‘சிம்பு மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அந்த நல்லுறவு பாதிக்கும் விதமாக, நான் எதையும் செய்ய விரும்பவில்லை. அவருடன் நெருக்கமாக பழகினாலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.’ என்றார்.
Post Comment