Actor Vijay 65 Movie Update..விஜய்க்கு ஜோடியாக 2ஹீரோயின்ககளா?
தெறிக்கவிடும் “தளபதி 65” அப்டேட்…. விஜய்க்கு ஜோடியாக 2ஹீரோயின்கள்…. வெளியான தகவல்…!!
தளபதி 65 படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கும் “தளபதி 65” படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு கூடிய விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Comment
No comments
Post a Comment