Breaking News

தலைவர் ரஜினி, தல அஜித் பட நடிகை,அம்மா வேடத்தில் நடிக்க தயாரானார்.

தலைவர் ரஜினி, தல அஜித் பட நடிகை,அம்மா வேடத்தில் நடிக்க தயாரானார்.



ரஜினி, அஜித் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை நக்மா தற்போது அம்மா வேடத்தில் நடிக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா, அஜித்தின் சிட்டிசன் திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை நக்மா.

சென்னை : ரஜினி, அஜித் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை நக்மா தற்போது அம்மா வேடத்தில் நடிக்கவுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பாட்ஷா, அஜித்தின் சிட்டிசன் திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை நக்மா. கடந்த 1990களில் சரத்குமார், கார்த்திக், சத்ய்ராஜ், பிரபுதேவா, பிரபு, பாக்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் நக்மா நடித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நக்மா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். இந்நிலையில் நக்மா, மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இரண்டு தெலுங்கு படத்தில் நக்மா நடிக்கவுள்ளதாகவும், ஒரு படத்தில் பிரபல அல்லு அர்ஜூன் அம்மாவாக நடித்து உள்ளதாகவும், பேட்டியில் அவரே தெரிவித்துள்ளார். தவிர, தமிழ் உட்பட தென் இந்திய மொழிகளில் நல்ல வேடம் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் நக்மா தெரிவித்துள்ளார்.